
துறையூர் ரெங்கநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
எம் எல் ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துறையூர் ரங்கநாதபுரம் மற்றும் செல்லிபாளையம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 11 9 2025 அன்று காலை ரங்கநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமினை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்று மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார்.
முகாமில் வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சாந்தி,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மற்றும் அரசு அலுவலர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தார்கள். முகாமில் சுமார் 15 அரசு துறைகள் கலந்து கொண்டன. து ரெங்கநாதபுரம் மற்றும் செல்லிபாளையம் ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அந்தந்த துறை அதிகாரிகளிடம் அளித்தனர். முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை து.ரெங்கநாதபுரம் ஊராட்சி செயலர் பாபு செய்திருந்தார்