

உப்பிலியபுரம் திமுக தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்##
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் திமுக தெற்கு ஒன்றியம் நெட்டவேலம்பட்டி இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 20 7 2025 அன்று மாலை நெட்டவேலம்பட்டி மாரியம்மன் கோயில் அருகில்
திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன்,வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ ஆர் கே கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை கழகப் பேச்சாளர் துரை பாண்டியன், இளம் பேச்சாளர் அ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், உப்பிலியபுரம் நகரச் செயலாளர் நடராஜன், மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், தலைவர்கள், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள், உப்பிலியபுரம் வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி பிரபாகரன்,கலைச்செல்வன்,கலைராஜா ,சஞ்சீவி, ராஜ்குமார் மற்றும் தெற்கு ஒன்றிய மாணவர் அணி, மற்றும் பச்சபெருமாள்பட்டி கிளைக்கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வரவேற்புரை தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விமல்.
நன்றியுரை இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதிவாணன்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.