Trichy Kaveri Murasu
kaveri murasu ad

பிறந்தநாளில் பள்ளிக்கு 100 மரக்கன்றுகள் வழங்கிய மாணவி

0 148
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள பைத்தம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்  முன்னிலையில் வளையெடுப்பு ரமேஷ் மற்றும் கவிதா அவர்களின் மகள் மோஹித்ரா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தான் பயிலும் பள்ளிக்கு சுமார் 100 பல் வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கி மாணவ மாணவியரிடையே சுற்றுப்புற பசுமை சூழ்நிலை சம்மந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் கூறுகையில் செல்வத்தின் பயனை ஈதல் நம்சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுரேஷ் ராஜா பாலாஜி விநாயகமூர்த்தி  உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் மாணவியை வெகுவாக பாராட்டியதோடு பெற்றோருக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.