
துறையூர் திமுக சார்பில் சமூக நீதி போராளி இம்மானுவேல் சேகரனார் 68 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண்நேரு மலர்கள் தூவி மரியாதை செய்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் திமுக சார்பில் 11 9 2025 அன்று காலை துறையூர் திருச்சி சாலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் சமூகப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என் அருண்நேரு நேரில் வருகை புரிந்து மலர்கள் தூவி மரியாதை செய்தார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், திருச்சி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன், முத்துச்செல்வன், அசோகன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுரேஷ்குமார்,
நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரண்யா மோகன்தாஸ் மற்றும் துறையூர் உப்பிலியபுரம் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கலந்துகொண்டு இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.