

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காளிப்பட்டி கிராமத்தில் கடந்த சுமார் 20 வருடங்களாக ஸ்ரீமாரியம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் (மாத தவனை சீட்டு மற்றும் பலகார சீட்டு) நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த அப்பாதுரை எனபவர் தவணைக்காலம் முடிந்தும் பலருக்கு முழுத் தொகையை திருப்பி தரவில்லை.
பணம் செலுத்தியவர்கள் இன்று காலை அவரது கடையை வந்து பார்த்தபோது கடையின் இரும்பு சட்டரில் பட்டை நாமம் போட்டு மூடப்பட்டுள்ளதை அதிர்ச்சி அடைந்தனர் அப்பாதுரையும் காணவில்லை தலைமறைவாகி ஓடிவிட்டார். அவர் சுமார் 10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது .
அவரிடம் பல வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி ஏமாந்ததை அறிந்து ஆவேசம் அடைந்தனர்.
அவர்கள் அந்த கடையின் முன்பே அமர்ந்து திருச்சி – துறையூர் சாலையில் இன்று 14-11-25 அன்று காலை மறியல் செய்தனர் சம்பந்தப்பட்ட துறையூர் காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் பேசி பிரச்சனைக்கு சட்டப்படி தீர்வு காணப்படும் என சொன்னதை அடுத்து மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.