

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருந்து வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவரும் சுமார் 34 மாணவ மாணவிகள் இருக்கின்றனர்.
இப்பள்ளியில் கடந்த இரண்டு நாள் விடுமுறை முடிந்து இன்று காலை ஆசிரியர் பள்ளி வகுப்பறையை திறந்த பொழுது வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கிடந்ததால் அதிர்ச்சியாகினர். நல்வாய்ப்பாக விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு சேதமேதும் இல்லாததை நினைத்து பெற்றோர்கள் ஆறுதல் அடைந்தனர்.

உடனே பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் முதல் தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெற்றோர்கள் முற்றுகை விட்டதை அறிந்து காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் விரைந்து பள்ளிக்கு வந்தனர். பிறகு பெற்றோர்களிடம் நடந்ததை கூறி இனி ஒருபோதும் இது நடக்காது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் நீங்கள் எதற்கும் அச்சப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என உயர் அதிகாரிகள் தெரிவித்த பின்பு சமாதானம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது.