

காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் இந்தியாவிலே முதல் முறையாக இடும்பன் காவடி எடுத்து கின்னஸ் வேல்டு புக் ஆப் ரெக்கார்டு விருதைப் பெற்றார்.

கலசப்பாக்கம் செப்டம்பர் 24 :
காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகர் பக்தர் கண்ணன் என்பவர் இந்தியாவிலே முதல் முறையாக முருகர் சுவாமிக்கு இடும்பன் காவடி எடுத்து கின்னஸ் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு விருதைப் பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் கின்னஸ் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காரப்பட்டில் இருந்து காஞ்சி குன்று மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் மலேசியா சிங்கப்பூரை தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக இடும்பன் காவடி எடுத்து கின்னஸ் சாதனை விருதை பெற்றார். இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கின்னஸ் வேல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் லிவிங்டன் தாஸ், வழக்கறிஞர் ராமராஜ், தமிழக ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று காரப்பட்டு இளைஞர் கண்ணனுக்கு கின்னஸ் வேல்டு புக் ஆப் ரெக்கார்டு விருதினை வழங்கி வாழ்த்துக்களை கூறினார்.
இந்நிகழ்வில் காரப்பட்டு முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோவன், ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனு மற்றும் சு.முத்து, எஸ்.கே.எம் முத்து, மணி, பரணி, சந்திரசேகர், கார்த்தி, தவகுமார் உள்ளிட்ட முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும், காஞ்சி.காரப்பட்டு ஊர் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் பலர் கலந்து கொண்டனர்