Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சி: துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2026 பொங்கல் விழா

0 276
kaveri murasu ad

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா##

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சாந்தி(வட்டாரம்), ரவிச்சந்திரன் (கிராமம்) தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவிலை தோரணம் கரும்பு தோரணம் மற்றும் மண்பானை அடுப்பு மூட்டி
மஞ்சள் கொத்துடன் சர்க்கரை பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
விழாவில் விஜயலட்சுமி (தணிக்கை), மேலாளர்கள் பெரியசாமி, பாஸ்கர், புவனேஸ்வரி, பன்னீர்செல்வம்,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகிலா, துரைராஜ், பார்த்தசாரதி, சசிகலா மற்றும் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மைக்காவலர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்லூரி வேளாண்மை மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.