

திருச்சி மாவட்டம் துறையூரில் 15-12-2025 அன்று காலை சுமார் 10 மணியளவில் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி இ-ஃபைலிங் உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் வழக்கறிஞர் (நோட்ரிப்ளிக் இந்தியா) கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் இ ஃபைலிங் முறை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப் பெரும் சிரமத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதால் அதை ரத்து செய்து பழைய நடைமுறையே அமல்படுத்த வேண்டும் என கோரி புதிய இ-ஃபைலிங் உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.மேலும் வழக்கறிஞர்கள் சேமநலநிதி 10 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி தரக்கோரியும் சுமார் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் துறையூர் நீதிமன்றம் முன் போராட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் சங்கச்செயலாளர் வழக்கறிஞர் முகமதுரஃபிக், பொருளாளர் வழக்கறிஞர் நரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் இ-ஃபைலிங் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.