

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியத்தில் 15-09-25 இன்று காலை”கடமை” “கண்ணியம்” “கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் உப்புலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ந.முத்துச்செல்வன் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அர.ந.அசோகன் , கோட்டப்பாளையம் மாவட்ட பிரதிநிதி அ. ராஜா (எ)மரியதாஸ் ஆகியோர் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நிகழ்வில் “மண்,மொழி, மானம் காக்க
ஓரணியில் தமிழ்நாடு தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குனிய விட மாட்டேன் எனற உறுதி மொழி ஏற்கப்பட்டது.” உடன் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பாக முகவர்கள், இளைஞர் அணிநிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.