
துறையூர் ஶ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வீரபத்திரன் அன்னாதானத்தை துவக்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் பெரியார் நகரில் ஶ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் 08-08-25 அன்று ஆடி வெள்ளித்திருவிழா நடைபெற்றது.
விழாவிற்கு வருகை புரிந்த திருச்சி வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீரபத்திரன் அம்மனை தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.நிகழ்வில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.