Trichy Kaveri Murasu
kaveri murasu ad

வேளாண் கல்லூரி மாணவர்களின் ஊரக பங்கேற்பு மதிப்பீடு

0 6
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சேனப்பநல்லூர் மற்றும் கீரம்பூரில் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு ஆய்வு நடத்திய தந்தை ரோவர் வேளாண்மை மாணவர்கள்.

(06/02/2026) அன்று தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், பெரம்பலூர் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள், RAWE (Rural Agricultural Work Experience)(ஊரக வேளாண் பணி அனுபவம்) திட்டத்தின் ஒரு பகுதியாக சேனப்பநல்லூர் மற்றும் கீரம்பூர் கிராமங்களில் Participatory Rural Appraisal (ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு) ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் மூலம் கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, விவசாயம், கால்நடை பராமரிப்பு, நீர் வளம், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கிராம வரைபடம் தயாரித்தல், வள ஆதார பட்டியல், பருவ காலப் பயிர் விவரம், பிரச்சனை முன்னுரிமை அட்டவணை போன்ற PRA(ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு) கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த செயல்பாட்டில், விவசாயிகள் தங்களின் முக்கிய பிரச்சனைகளாக நீர் பற்றாக்குறை, எலி மற்றும் பூச்சி தாக்குதல், சந்தை விலை மாற்றம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். மாணவர்கள் அவற்றை பதிவு செய்து, தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. கிராம வளர்ச்சித் திட்டங்களை மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டு திட்டமிட PRA(ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு) முறை மிகவும் உதவிகரமாக இருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
ச. ஹரி விக்னேஷ், பொ. ஜெயபிரபு, சீ. ஜெய பிரகாஷ், ரா. ஹேமச்சந்திரன், சௌ. கோகுல்நாத், ஜெய சூர்யா டி., ஜோஸ்வா கிருஸ்வின், வி. ஜெய்வந்த், வ. ஜெயவர்மன் மற்றும் ஜெ. ஜெயசாய்ராம் ஆகியோர் இதில் பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.