
தமிழ்த் திரைப்பட சிறு முதலீடு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா
2026 புதிதாக அமையவிருக்கும் தமிழக அரசுக்கு சங்கத்தின் சார்பில் 11 கோரிக்கைகள் தீர்மானம்

சென்னையில் இயங்கி வரும் தமிழ் திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா 28-04-2026 அன்று மாலை 6 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.மேலும்தமிழக அரசுக்கு சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்கும் விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தலைவர் தயாரிப்பாளர் நடிகர் ஆர் கே அன்பு செல்வன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் நடிகர் K ராஜன்
பிரபல நடிகையும் அரசியல் விமர்சகருமான ஒய்.ஜி.மதுவந்தி
பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மற்றும்
கண்ணதாசன்
மேக்னா
ஜோதிமணி
பாபு
ஜெனீஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் சிறப்பாக திரை உலகில் பணியாற்றிய கலைஞர்களாகிய
தயாரிப்பாளர்கள். 34
அலுவலக நிர்வாகம் 10
சண்டை பயிற்சியாளர்கள் 44
கலை இயக்குநர் 4
நடிகர் 7
ஒப்பனை கலைஞர். 4
சிகையலங்காரம் 1
சண்டை பயிற்சியாளர் 7
இசையமைப்பாளர். 2
நடன இயக்குநர் 5
ஒளிப்பதிவாளர் 3
மக்கள் தொடர்பாளர் 2
எடிட்டர் 1
பின்னணி குரல் 1
ஆர்ட்டிஸ்ட் ஏஜென்ட் 2
விளம்பரதாரர் 1
பாடலாசிரியர் 3
நிர்வாக தயாரிப்பாளர் 2
இயக்குனர் 2
புகைப்படக் கலைஞர் 1
சென்சார் ஒருங்கிணைப்பாளர் 2
என ஏராளமானோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவம் செய்தார் தலைவர் ஆர் கே அன்புச்செல்வன்.
மேலும் நிகழ்வில்
சங்கத்தின் அன்பான கோரிக்கைகள் என
1 *தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தொழிலாளர்களுக்கு* *மாதாந்திர ஓய்வூதியம்*
2 *தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க உறுப்பினர்கள் *மருத்துவ வசதி மற்றும் காப்பீடு*
3 *சங்க உறுப்பினர்களின் விபத்து/இறப்பு காலங்களில் நிவாரண* *உதவி தொகை*
4 *தமிழில் பெயர்வைத்து தணிக்கை சான்றிதழ் பெற்ற* *திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர் வாழ்வாதாரம் பாதிக்கத்தை* *வகையில் மானியம் உடனடியாக வழங்க வேண்டும்*
6 *தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க* *வீட்டு வசதி/* *இலவச வீட்டுமனை பட்டா*
7. *பெண் கலைஞர்களுக்கு , மகப்பேறு கால நிவாரணம் மட்டும்* *வேலை பாதுகாப்பு காப்பீடு*
8.*நடிகர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப* *கலைஞர்களுக்கு அரசின் திட்டங்களில் சிறப்பு சலுகை*
9. *60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்களுக்கு நலவாரிய வாரியம்* *மூலம் நிலையான
ஓய்வூதியம் வழங்க வேண்டும்*
10. சங்க உறுப்பினர் ஆண்டிற்கு பல நாட்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அந்த நேரங்களில் அவர்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்
11. படபிடிப்பு தங்களில் அனுமதி கட்டணத்தை சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு பாதியாக குறைக்க வேண்டும் தமிழக காவல் துறையும் படபிடிப்பு தளங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி புதிதாக அமையவுள்ள தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.
மேலும் முப்பெரும் விழாவிற்கு தங்கள் அன்பான அழைப்பினை ஏற்று வருகை புரிந்து சிறப்புரையாற்றி விழாவினை சிறப்பித்து தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் தலைவர் ஆர் கே அன்புச்செல்வன்.