Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூர் கோம்பைபுதூரில் சமையலறை கட்டிடம் திறப்பு விழா

அருண்நேரு எம்பி திறந்து வைத்தார்

0 5
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கீரம்பூர் ஊராட்சி கோம்பைபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 7.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய வகுப்பறையுடன் கூடிய சமையல் அறை கட்டிடம் திறப்பு விழா 20-02-26 அன்று நண்பகலில் நடைபெற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன் மற்றும் கோம்பை புதூர் திமுக கிளைச் செயலாளர் பூங்குன்றன் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறையூர் திமுக கிழக்கு ஒன்றியம் மற்றும் ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவிற்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கீரம்பூரிலிருந்தும் வரதராஜபுரத்திலிருந்தும் கோம்பைப்புதூர் கிராமத்திற்கு செல்லும் கிராமச்சாலை மிகவும் பல வருடங்களாக மோசம் அடைந்து இருக்கிறது ஆதலால் கிராம சாலையை உடனடியாக சீர் செய்தோ அல்லது புதிய தார்ச்சாலை அமைத்தோ தரும்படி கிராம பொதுமக்கள் எம்பி அருண் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். அருண்நேரு எம்பி கோரிக்கையை ஏற்று சாலையை உடனடியாக செய்து தருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம் என உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.