

18.02.2026 அன்று
திருச்சி மாவட்டம் துறையூர் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் ஆல் தி சில்ரன் C.S.I மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஐசெக் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். மேலும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் சார்பில்
வசந்தி துணை பேராசிரியர், முனைவர் நாகலட்சுமி துணை பேராசிரியர்,ஷியாமளா தேவி துணை பேராசிரியர்,பவித்ரா துணை பேராசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி முருகையா ஏற்பாடு செய்திருந்தார். ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் சார்பில் 50 மாணவிகள் மற்றும் சிஎஸ்ஐ பள்ளியின் சார்பில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பாதையை ஏந்திக்கொண்டு பேரணி நடத்தினார்கள். முடிவில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் துணை பேராசிரியர் வசந்தி நன்றி கூறினார்.