Trichy Kaveri Murasu
kaveri murasu ad

ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கல்

0 5
kaveri murasu ad

(26.02.2026) அன்று திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் காசநோய் இலவச முன்முயற்சி திட்டத்தின் கீழ் காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்க ஏற்பாடு செய்தார்கள். இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர் டாக்டர். பொன்ரஞ்சனி மற்றும் சுகாதார ஆய்வாளர் வெற்றி வேந்தன் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வெண்ணிலா,STS மற்றும் ராஜேஸ்வரி,HV இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்துக்கொடுத்ததாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.