Trichy Kaveri Murasu
kaveri murasu ad

ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு பேரணி

0 2
kaveri murasu ad

இன்று (05.06.2026) திருச்சி மாவட்டம் துறையூர் CSI மேல்நிலைப்பள்ளியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்-2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு வழங்கி CSI மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் CSI மேல்நிலைப்பள்ளியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தேவாங்கு நகர் வரையில் விழிப்புணர்வு பாதாகையை ஏந்தி பேரணியாக சென்று கிராம பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இயேசுகுமார் தலைமை ஏற்று நடத்தி கொடுத்தார். உதவி ஆசிரியர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா ஏற்பாடு செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.