Trichy Kaveri Murasu
kaveri murasu ad

உப்பிலியபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா

0 7
kaveri murasu ad

துறையூர்:உப்பிலியபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா##

 

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் வட்டாரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 13 2 2026 அன்று காலை 12 மணி அளவில் உப்பிலியபுரம் ஓ.கிருஷ்ணாபுரம் சமுதாயக்கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பொன்னி சியாமளா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கண்காணிப்பாளர் அகிலா நன்றியுரை தெரிவித்தார்.
விழாவில் உப்பிலியபுரம் வட்டாரத்துக்கு உட்பட்ட சுமார் 130 நிறைமாத கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக தட்டு மஞ்சள் குங்குமம் வளையல் பழங்கள் கடலை மிட்டாய் வெற்றிலை பாக்கு பூ மாலை சாக்லேட் ஆயிரம் நாள் கையேடு வளைகாப்பு காப்பு மற்றும் சீமந்த உணவுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்வில் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன்,அசோகன் மற்றும் பேரூர் நகரச் செயலாளர் நடராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சோபனபுரம் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave A Reply

Your email address will not be published.