Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூரில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

அமைச்சர் கே என் நேரு அறிமுகம் செய்து வைத்து அறிமுக உரை ஆற்றினார்

0 114
kaveri murasu ad

திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற (தனி) தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற (தனி) தொகுதிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக

திரு லெனின் பிரசாத் அவர்களை

தேர்வு செய்தது திமுக தலைமை கழகம்.

இதனைத் தொடர்ந்து ஆறு நாலு 2026  வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று துறையூர் சட்டமன்ற தனி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் லெனின் பிரசாத் அவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கத் தறை அமைச்சர் கே என் நேரு தலைமை வகித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்

துறையூர் தனி சட்டமன்றத் தொகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த விசுவாசிகளையே வேட்பாளராக நிறுத்த எவ்வளவோ முயன்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நமது கூட்டணி கட்சிக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் நாம் ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்று நினைக்காமல் திமுக வேட்பாளர் என்று நினைத்து நமது தளபதி தலைவர் முதல்வர் அவர்களுடைய உத்தரவின் பேரில் தோழமை கட்சியின் வெற்றிக்காக இந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான உழைப்பை அனைவரும் தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

மேலும் நமது தலைவர் அறிவித்துள்ள முத்தான தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்று விலக அவர்களை கைச்சின்னத்தில் வாக்களிக்குமாறுன கேட்டுக் கள்ள வேண்டும் எனவும் உரையாற்றினார்.

கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு மற்றும் துறையூர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன், அசோகன், நகர்மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் மற்றும் காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் இளைஞர் காங்கிரஸின் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் துறையூர் திருச்சி சாலையில் தர்மன் பில்டிங்கில் துறையூர் சட்டமன்ற தனி தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது.

அமைச்சர் கே என் நேரு குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்து தேர்தல் பணிகளை துவக்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.