
திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு பெண்கள் பூரண கும்பம் மரியாதை
துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் வாக்கு சேகரிப்பு

திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் லெனின் பிரசாத் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு பெற்று தினமும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் துறையூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வாக்கு சேகரிப்பில் உடனிருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து
இன்று உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் லெனின் பிரசாத்துக்கு செல்லும் இடமெங்கும் பெண்களின் அமோக வரவேற்பும் பூரண கும்ப மரியாதையும் செய்து வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.