Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூரில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் அம்பேத்கர் 136 ஆவது பிறந்தநாள் விழா

கஸ்டமஸ் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது

0 44
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் துறையூர் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் அணணல் அம்பேத்கர் 136 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம் தலைமையில் துறையூரில் இந்திய அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் 14-04-26 அன்று காலை 10 மணியளவில் திருச்சி சாலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. கேக் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது. நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் லெனின் பிரசாத்,
முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர துணை சேர்மன் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யாமோகன்தாஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன், நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், புரொப‌சர் பன்னீர் செல்வம் , காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கண்ணனூர் பிரீஸ் சரவணன்,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்
ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.