

திருச்சி மாவட்டம் துறையூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 16-02-26 அன்று காலை துறையூர் அருகே காளிப்பட்டியில் நடைபெற்றது.சுமார் 18.50 கோடி மதிப்பீட்டில் உருவாக இருக்கும் கல்லூரி தனை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு பூமி பூஜையினை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், அசோகன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யாமோகன்தாஸ்
உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறையூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையும் பொருட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீர பத்திரன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று நன்றியுரை நிகழ்த்தினார்.
கட்டிட ஒப்பந்ததாரர் அருண் உள்ளிட்டோரும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.