Trichy Kaveri Murasu
kaveri murasu ad

மண்ணச்சநல்லூர் புதிய சட்ட மன்ற அலுவலகம் திறப்பு விழா

அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்

0 2
kaveri murasu ad

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அருகே 26-02-26 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு பொது மக்களை எந்நேரமும் சந்திக்கவும் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு உதவிகள் புரிந்து விடவும் புதிய சட்டமன்ற அலுவலகத்தை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சி கதிரவன் ஏற்பாடு செய்தார். அதன் பொருட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற புதிய அலுவலகத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு  தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் நிறுவனர் வேந்தர் சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான முறையில் அசைவ பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.