

துறையூர் | மார்ச் 15, 2026
திருச்சி மாவட்டம் துறையூரில், சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அதனைச் சீர்செய்யத் தவறிய பாஜக அரசைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவின் கடை கோடி கிராமப்பகுதிகளில் எதிரொலிப்பதன் விளைவாக, துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் உணவகங்கள் அன்றாட உணவு சமைக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், விலையேற்றத்தைத் தடுக்கத் தவறியதாகவும் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப் போராடினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,
திருச்சி மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் -ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், நகர்மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மாகலிங்கம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, நகர்மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நகர் மன்ற உறுப்பினர் அம்மன் பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.“பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும்” எனவும் தமிழகத்திற்க்கு தரவேண்டிய நிதியை உடனடியாக தரவேண்டும் எனவும் பல் வேறு கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது.![]()
