

(22.05.2026) அன்று திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டி, பகளவாடி மற்றும் வெளியனூர் பஞ்சாயத்துகளில் நீரிழிவு நோயை வெல்வோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நீரழிவு நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு குறித்து ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் நீரிழிவு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் முசிறி வட்டம் முவானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கிராம பொது மக்களிடம் அடிக்கடி திசுக்கலைப்பு செய்வதினால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் புகையிலை அதிகமாக பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் மருத்துவ அலுவலர் டாக்டர்.ரேணுகா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிராமப்புற சுகாதார செவிலியர் நீமாரோஸ் கிராமப்புற பொது மக்களுக்கு நீரழிவு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.முருகையா ஏற்பாடு செய்திருந்தார்.