Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்

0 36
kaveri murasu ad
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று 08-010-25 இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே என் நேரு முன்னிலையில்

திருச்சி மத்திய மாவட்டம்,  திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தேர்தல் களப்பணிகள்  திமுக அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது – சமூக வலைதள ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து மாண்புமிகு துணை முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு,திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார்,பழனியாண்டி, கதிரவன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Leave A Reply

Your email address will not be published.