

திருச்சி வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி பொங்கல் திருநாளை முன்னிட்டு 11.1.2026 ஆம் நாள் காலை துறையூர் தனியார் பள்ளி வளாகத்தில் “திராவிட பொங்கல்” எனும் மாபெரும் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார். வரவேற்புரை துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் திருச்சி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளருமான தர்மன் ராஜேந்திரன்,துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் இள. அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வீரபத்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் மற்றும் துறையூர் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ₹10,000, இரண்டாம் பரிசாக 8000, மூன்றாம் பரிசாக ₹5000 நான்காம் பரிசாக ₹3000 என ரொக்கம் மற்றும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கு நன்றியுரை துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் இள அண்ணாதுரை.