Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0 14
kaveri murasu ad
திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி

துறையூரில் “125 நாள் வேலை உறுதி திட்டத்தை பற்றி அவதூறு பரப்புவதாக திமுக அரசை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து  13-02-26 அன்று ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இந்திராகாந்தி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மற்றும் துறையூர் வட்டார அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.