

தமிழகத்தில் 17வது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திருச்சி வடக்கு மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் என் யோகநாதன் பேசுகையில் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆசியில் புரட்சித் தமிழர் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி வழிகாட்டுதலில் முசிறி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் துணியோடு அதிமுக வேட்பாளராக களம் காண்கிறேன். முசிறி சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என மக்கள் தற்போதே வெற்றியை வழங்கி விட்டார்கள். காரணம் முசிறி சட்ட மன்ற தொகுதி வாக்களர்கள் நான் செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு அளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பொழுது முசிறி சட்டமன்றத் தொகுதி அதிமுகவிற்கே என உறுதி படுத்துகிறது. ஆதலால் விடியா திமுக ஆட்சி 2026 ஆம் ஆண்டோடு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. 234 தொகுதியிலும் அதிமுக நிச்சயம் வெல்லும் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தின் தனிப் பெரும்பான்மை சக்தியோடு முதலமைச்சர் பதவி ஏற்பார் இது நிச்சயம் இது சத்தியம் என தெரிவித்தார். உடன் முசிறி சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள்.