Trichy Kaveri Murasu
kaveri murasu ad

துறையூரில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

0 153
kaveri murasu ad

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 17 வது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவும் மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

ஆதலால் அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய 6 4 2026 அன்று கடைசி தேதியை முன்னிட்டு

திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி (தனி) க்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு துறையூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையால் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆதலால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் சயலாளர் எம்.லெனின் பிரசாத் வேட்பாளராக தேர்வு பெற்றதை தொடர்ந்து 6 4 2026 இன்று துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தொடர்ந்து  பாலக்கரையிலிருந்து பேருந்து நிலைய வரை மாண்புமிகு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு, மாண்புமிகு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு ஆகியோர்  தலைமையில் மாபெரும்  ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் வேட்பாளர் லெனின் பிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உடன் தேர்தல் பொது மேற்பார்வையாளர் பிஜய்தாஸ் குமார் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சிவக்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் துரைசங்கர் ஆகியோர்.

முன்னதாக நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வர்கள் கூட்டத்தில் துறையூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சரவணன், வீரபத்திரன், முத்துச்செல்வன், அசோகன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.